பேச் மலர் மருத்துவம் – விளக்கம்
பேச் மலர் மருத்துவம் மனிதனின் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலையை மையமாகக் கொண்டு அணுகும் இயற்கை சார்ந்த துணை நலமுறை. இந்த அணுகுமுறையை எளிமையாகப் புரிந்துகொள்ள கீழே உள்ள கேள்விகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பேச் மலர் மருத்துவம் (Bach Flower Therapy) என்பது மனிதனின் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் மனநிலையை மையமாகக் கொண்டு அணுகும் இயற்கை சார்ந்த துணை நலமுறை ஆகும்.
பயம், கவலை, குழப்பம், தயக்கம், குற்ற உணர்வு, மனச்சோர்வு, விரக்தி, தனிமையுணர்வு, கோபம், பொறாமை, மனக்கசப்பு, தன்னம்பிக்கையின்மை போன்ற பல்வேறு மனநிலைகளைப் புரிந்துகொண்டு, அவற்றிற்கு ஏற்ற மலர் மருந்துகளை தனிநபரின் தற்போதைய மனநிலையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே இந்த முறையின் சிறப்பம்சமாகும்.
“என்ன பிரச்சனை?” என்பதை மட்டும் அல்லாமல், “அந்தப் பிரச்சனையை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?” என்பதையும் புரிந்துகொள்வது இந்த அணுகுமுறையின் முக்கிய அம்சமாகும்.
ஒரே மாதிரியான வாழ்க்கைப் பிரச்சனையை சந்திக்கும் இரண்டு நபர்களின் உணர்வுகளும் மனப்பாங்கும் வேறுபடலாம். எனவே அவர்களுக்கான மலர் மருந்துகளின் தேர்வும் வேறுபடலாம்.
மனமும் உடலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதில் ஏற்படும் கவலை, பயம், கோபம் அல்லது நீடித்த மனஅழுத்தம் நமது அன்றாட வாழ்க்கை, உறக்கம், செயல்திறன் மற்றும் உடல் நல உணர்வைப் பாதிக்கக்கூடும்.
அதேபோல் உடல்நலக் குறைபாடுகளும் ஒருவரின் மனநிலையைப் பாதிக்கலாம். எனவே உடலை மட்டும் அல்லாமல் மனிதனை முழுமையாகப் புரிந்துகொள்வதும் நல்வாழ்விற்கான முக்கியமான அணுகுமுறையாகும்.
மனித வாழ்க்கையில் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் முக்கியமானவை. நமது எண்ணங்களே பல நேரங்களில் நமது உணர்வுகளையும், முடிவுகளையும், செயல்களையும் வழிநடத்துகின்றன.
அஷ்டாங்க யோகத்தின் முதல் இரண்டு நிலைகளான இயமம் (Yama) மற்றும் நியமம் (Niyama) தனிமனிதனின் எண்ணம், சொல், செயல் மற்றும் வாழ்வியல் ஒழுக்கங்களுடன் தொடர்புடைய வழிமுறைகளை எடுத்துரைக்கின்றன.
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே
தமிழ்ச் சித்தர் மரபில் இடம்பெறும் இந்த வரிகள் மனத்தின் செம்மையும் உள்ளார்ந்த ஒழுக்கமும் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவை என்பதை நினைவூட்டுகின்றன.
“எனக்கு ஏன் இந்தப் பயம்?”, “என்னால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை?”, “தோல்வியை ஏன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?”, “கடந்த நிகழ்விலிருந்து ஏன் என்னால் வெளிவர முடியவில்லை?”, “என்னுடைய திறமை மீது எனக்கு ஏன் நம்பிக்கை இல்லை?” போன்ற கேள்விகள் நம்முடைய மனநிலையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
இவ்வாறு சுயபரிசீலனையின் மூலம் தற்போதைய உணர்வு நிலையைப் புரிந்துகொண்டு , அதற்கேற்ற மலர் மருந்துகளைத் தேர்ந்தெடுப்பது இந்த அணுகுமுறையின் முக்கிய அம்சமாகும்.
சில நேரங்களில் திறமையும் வாய்ப்புகளும் இருந்தபோதிலும், “என்னால் முடியாது”, “நான் தோற்றுவிடுவேன்”, “எனக்கு எதுவும் சரியாக நடக்காது” போன்ற எண்ணங்கள் ஒருவரின் செயல்பாட்டைத் தடுக்கலாம்.
பேச் மலர் மருத்துவத்தில் தன்னம்பிக்கையின்மை, தோல்வி பயம், நம்பிக்கையிழப்பு, தயக்கம் மற்றும் விரக்தி போன்ற மனநிலைகள் தனித்தனியாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
இதன் நோக்கம் வெற்றியை உறுதியளிப்பது அல்ல; வாழ்க்கையின் சவால்களை சமநிலையான மனநிலையுடன் எதிர்கொள்ள உணர்ச்சி ஆதரவு அளிப்பதாகும்.
பழைய சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருப்பது, நடந்திருக்க வேண்டியவற்றைப் பற்றி வருந்துவது அல்லது ஒரே எண்ணம் தொடர்ந்து மனதில் ஓடிக்கொண்டிருப்பது நிகழ்காலத்தின் மீதான கவனத்தைக் குறைக்கலாம்.
பேச் மலர் மருத்துவத்தில் கடந்த காலத்தில் மனம் தங்கியிருத்தல், தொடர்ச்சியான எண்ண ஓட்டம், நிகழ்காலத்தில் கவனம் செலுத்த முடியாமை போன்ற மனநிலைகள் தனித்தனியாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் அறிவுத்திறன் மட்டுமல்லாமல் கவனம், ஆர்வம், தன்னம்பிக்கை, மன அமைதி மற்றும் தொடர்ந்து முயற்சி செய்யும் மனப்பாங்கும் முக்கியமானவை.
ஒரு குழந்தைக்கு தன்னம்பிக்கையின்மை இருக்கலாம்; மற்றொரு குழந்தைக்கு தேர்வு பயம் இருக்கலாம். சிலருக்கு கவனச்சிதறல் இருக்கலாம்; சிலர் செய்த தவறையே மீண்டும் செய்து அதிலிருந்து கற்றுக்கொள்ள சிரமப்படலாம்.
எனவே “குழந்தை படிக்கவில்லை” என்ற காரணத்தை மட்டும் வைத்து மலர் மருந்து தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. குழந்தையின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மனப்பாங்கைப் புரிந்துகொண்டு தேர்வு செய்யப்படுகிறது.
இது மதிப்பெண்களை உறுதியளிப்பதோ அல்லது தேவையான மருத்துவ / கல்விசார் மதிப்பீட்டிற்கு மாற்றாக இருப்பதோ அல்ல.
நெருக்கமான உறவுகளில் எதிர்பார்ப்பு, மனக்கசப்பு, கோபம், பொறாமை, கவலை, அதிகப்படியான பற்றுதல் மற்றும் ஏமாற்றம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
பேச் மலர் மருத்துவத்தில் இவை அனைத்தும் ஒரே மனநிலையாகப் பார்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அதன் பின்னால் இருக்கும் மனப்பாங்கையும் புரிந்துகொண்டு பொருத்தமான மலர் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
இதன் நோக்கம் மற்றவர்களை மாற்றுவது அல்ல. தனது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்பு, பொறுமை, புரிதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உணர்ச்சி சமநிலையுடன் உறவுகளை அணுகுவதற்கு ஆதரவளிப்பதாகும்.
- குழந்தைகளின் கல்வியுடன் தொடர்புடைய பயம், கவனச்சிதறல் மற்றும் தன்னம்பிக்கையின்மை
- வேலை மற்றும் தொழில் சார்ந்த தயக்கம், தோல்வி பயம் மற்றும் மனச்சோர்வு
- நேர நிர்வாகம் மற்றும் அன்றாட ஒழுக்கம்
- மாற்ற விரும்பும் பழக்கங்களுடன் தொடர்புடைய மனநிலைகள்
- புதிய வேலை, திருமணம், இடமாற்றம், பள்ளி மாற்றம் போன்ற வாழ்க்கை மாற்றங்கள்
- பயம், கவலை மற்றும் நம்பிக்கையின்மை
- தன்னம்பிக்கையின்மை மற்றும் முடிவெடுப்பதில் குழப்பம்
- குடும்பம் மற்றும் உறவுகளில் ஏற்படும் உணர்வுகள்
- கடந்தகால அனுபவங்களிலிருந்து முன்னேறுவதில் ஏற்படும் சிரமம்
- திரும்பத் திரும்ப வரும் எண்ணங்கள் மற்றும் நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதில் ஏற்படும் சிரமம்
இல்லை.
உதாரணமாக, இரண்டு நபர்களுக்கும் வேலை கிடைக்காமல் இருக்கலாம். ஒருவர் தொடர்ச்சியான தோல்விகளால் மனம் தளர்ந்திருக்கலாம். மற்றொருவர் தனது திறமையின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம்.
வெளிப்புற பிரச்சனை ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களின் மனநிலை வேறுபடுகிறது. எனவே மலர் மருந்தின் தேர்வும் வேறுபடலாம். இதுதான் தனிநபர் சார்ந்த மலர் மருந்துத் தேர்வின் முக்கியத்துவம்.
ஆலோசனையின் போது உங்கள் தற்போதைய பிரச்சனை மட்டுமல்லாமல், அதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள், எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள், அதனுடன் தொடர்புடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யப்படும்.
அதன் அடிப்படையில் உங்களுடைய தற்போதைய மனநிலைக்கு பொருத்தமான பேச் மலர் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் தனிப்பட்ட மனநிலையின் அடிப்படையிலேயே மலர் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
முக்கியக் குறிப்பு
பேச் மலர் மருத்துவம் உணர்ச்சி மற்றும் மனநல நல்வாழ்விற்கான ஒரு complementary wellbeing approach ஆக பயன்படுத்தப்படுகிறது.
இது மருத்துவரின் நோயறிதல், மருத்துவ சிகிச்சை, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், உளவியல் அல்லது மனநல சிகிச்சைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுவதில்லை. உடல் அல்லது மனநலப் பிரச்சனைகளுக்கு தேவையான தொழில்முறை மருத்துவ உதவியைத் தொடர்ந்து பெறுவது முக்கியம்.
மலர் மருத்துவ ஆலோசனை
Anjanam Mind & Life Wellness
Phone / Online Consultation Available
Bach Flower Therapy – The Explanation
Bach Flower Therapy is a natural complementary wellbeing approach that focuses on a person's emotions, thoughts and state of mind. The questions below provide a simple explanation of this approach.
Bach Flower Therapy is a natural complementary wellbeing approach that focuses on a person's emotions, thoughts and state of mind.
It considers emotional states such as fear, worry, confusion, hesitation, guilt, discouragement, frustration, loneliness, anger, jealousy, resentment and lack of confidence. Flower remedies are selected according to the individual's present emotional state.
Rather than considering only “What is the problem?”, this approach also considers “How does the person feel about and respond to the problem?”
Two people may experience a similar life situation but respond to it with very different emotions and attitudes. Therefore, the flower remedies selected for them may also be different.
The mind and body influence one another. Worry, fear, anger or prolonged emotional stress may affect everyday life, sleep, performance and a person's sense of physical wellbeing.
Similarly, physical health difficulties can affect a person's emotional state. Therefore, wellbeing can benefit from understanding the person as a whole, rather than looking at only one aspect.
Thought, speech and action all have an important place in human life. Our thoughts often influence our emotions, decisions and actions.
The first two limbs of Ashtanga Yoga, Yama and Niyama, also emphasize principles connected with personal conduct, discipline and ways of living.
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே
These traditional Tamil Siddhar verses remind us of the importance placed on cultivating and refining the mind and developing inner discipline.
Questions such as “Why am I afraid of this?”, “Why is it difficult for me to make this decision?”, “Why is it difficult for me to accept failure?”, “Why am I unable to move forward from a past experience?” or “Why don't I trust my own ability?” can help us understand our emotional state more clearly.
Through such self-reflection and understanding of the present emotional state , suitable flower remedies can be selected according to the individual.
Even when a person has ability and opportunities, thoughts such as “I can't do it”, “I will fail” or “Nothing works out for me” may affect the way they approach situations.
Bach Flower Therapy distinguishes between emotional states such as lack of confidence, fear of failure, loss of hope, hesitation and discouragement .
Its purpose is not to guarantee success, but to offer emotional support while a person faces life's challenges with a more balanced state of mind.
Repeatedly thinking about past events, regretting what might have been, or having the same thoughts continuously running through the mind can reduce our attention to the present moment.
Bach Flower Therapy considers emotional patterns such as dwelling on the past, repetitive thoughts and difficulty remaining mentally present as distinct states.
A child's educational development involves not only intellectual ability but also attention, interest, confidence, emotional calmness and willingness to keep trying .
One child may lack confidence, while another may experience fear around examinations. Some may be easily distracted, while others may find it difficult to learn from repeated mistakes.
Therefore, a flower remedy is not selected simply because “the child is not studying.” The child's individual emotions and attitude are considered.
This does not guarantee academic results and is not a substitute for appropriate medical, psychological or educational assessment when such support is needed.
Close relationships may involve expectations, resentment, anger, jealousy, worry, excessive attachment or disappointment.
Bach Flower Therapy does not treat all of these as the same emotional state. The nature of the emotion and the attitude behind it are considered when selecting appropriate flower remedies.
The aim is not to change another person. It is to support an individual in understanding their own emotions and approaching relationships with greater love, patience, understanding, acceptance and emotional balance .
- Fear, distraction or lack of confidence related to children's education
- Hesitation, fear of failure or discouragement related to work and career
- Time management and everyday discipline
- Emotional patterns connected with habits a person wishes to change
- Life changes such as a new job, marriage, relocation or changing schools
- Fear, worry and loss of hope
- Lack of confidence and difficulty making decisions
- Emotional difficulties within family and relationships
- Difficulty moving forward from past experiences
- Repetitive thoughts and difficulty focusing on the present
No.
For example, two people may both be unable to find a job. One may have become discouraged after repeated setbacks, while the other may lack confidence in their own abilities.
The external situation may appear similar, but their emotional responses are different. Therefore, the remedies selected may also be different.
This is the importance of individualized flower remedy selection.
During a consultation, attention is given not only to the situation you are facing, but also to how you feel about it, how you respond to it, and the thoughts and emotions associated with it .
Based on this understanding, flower remedies are selected according to your present emotional state.
Remedy selection is individualized according to each person's emotional state and response to their circumstances.
Important Note
Bach Flower Therapy is used as a complementary approach to emotional wellbeing.
It is not a substitute for medical diagnosis, medical treatment, prescribed medication, psychological care or mental health treatment. Appropriate professional healthcare should continue to be sought for physical or mental health concerns.
Bach Flower Consultation
Anjanam Mind & Life Wellness
Phone / Online Consultation Available